Welcome Visitor: Login to the siteJoin the site

THAAIMAI-2

Script By: shiridi999
Other


THIS IS STORY.....


Submitted:Oct 25, 2013    Reads: 10    Comments: 0    Likes: 0   


காட்சி- 1

இடம்: கற்பகாம்பாள் காலனி முகப்பு. /நேரம் :அதிகாலை

திரையில் ஒரு பெரிய காலனி தெரிகிறது.(FADE IN)சூரிய வெளிச்சம் மெல்ல மெல்ல அந்த காலனியில் பரவுகிறது.'கீச்சு கீச்சு' என்ற குருவிகளின் குரல் மெதுவாக ஒலிக்கிறது.காலனியில் சூழ்ந்து இருந்த பனிமூட்டம் மெல்ல விலகுகிறது.சைக்கிள்-இல் பெல் அடிக்கும் ஓசை பின்னணியில் கேட்கிறது.(FADE OUT)

காட்சி- 2

இடம்: ஜோதி வீடு/ நேரம்: அதிகாலை.

திரையில் ஒரு வீடு காட்டப்படுகிறது.(FADE IN ) '49/20' என்று வீட்டின் நம்பர் போர்டு சுவற்றில் காட்டப்படுகிறது. 'கௌசல்யா சுப்ரஜா ராமபூர்வா சந்த்யா பிரபச்சதே' என்று சுப்ரபாத ஓசை பின்னணியில் ஒலிக்கிறது.காட்சி மெல்ல வீட்டின் உள்ளே நகர்கிறது(DOLLY TRACKING SHOT ).வீட்டின் உள்ளே சாம்பிராணி வாசம் பரவி, ஒருவித தெய்வீக சூழலை உணர செய்கிறது.வீட்டின் பின்புறம் எங்கோ தண்ணீரை மெதுவாக ஊற்றும் ஓசை கேட்கிறது.

காட்சி- 1B

இடம்-துளசிமாடம் /நேரம்: அதிகாலை

வளையல் அணிந்த அழகான இரு கைகள் சிறிய சொம்பினில் தண்ணீரை எடுத்து,மாடத்து துளசியின் மேல் மெதுவாக ஊற்றுகிறது.குளித்து முழுகிய ஈரக்கோலத்தோடு, தாமரை மலர் போல கைகளை குவித்து வைத்து கொண்டு,காலில் 'ஜல ஜல' என்று கொலுசு ஓசை ஒலிக்க,துளசிமாடத்தை சுற்றி வருகிறாள் ஒரு அழகான பெண்.அவளது முகம் க்ளோசப் (CLOSE UP )-இல் காட்டப்படுகிறது.

காட்சி- 1C

இடம்: ஜோதியின் வீட்டு வாசற்படி/நேரம்: அதிகாலை

ஒரு கையில் கோலமாவுடன்,இன்னொரு கையில் வாளி நிறைய தண்ணீர் எடுத்துகொண்டு வாசற்படி வருகிறாள்.தண்ணீர் தெளித்து மெல்ல அமர்ந்து கோலமிடுகிறாள்.

ரேணுகா: ஜோதி............!

தலை நிமிர்ந்து பார்க்கிறாள் ஜோதி.

ஜோதி: "குட் மார்னிங்-க்கா ............"

ரேணுகா: ஏம்மா ஜோதி,நானும் தினமும் பார்க்குறேன்.இந்த காலனியில நீ மட்டும்தான் ரொம்ப சீக்கிரமா எழுந்திரிச்சு வந்து கோலம் போடுறியே...."

ஜோதி சிரித்த முகமாக...........

ஜோதி: அதுல என்னக்கா இருக்கு? நாம எவ்வளவு சீக்கிரம் எழுந்திரிகிறோமோ அன்னிக்கி பூராவும் அந்த நாள் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.நீங்க வேணும்னா தினமும் சீக்கிரம் எழுந்திரிச்சு பாருங்களேன்? உங்களுக்கே பிடிச்சு போகும்."

இதை சொல்லிவிட்டு ஜோதி கோலகிண்ணத்தை எடுத்துக்கொண்டு உள்ளே செல்கிறாள்.

காட்சி-1D

இடம்:வீட்டின் பூஜை அறை/நேரம்: காலை

ஜோதி பூஜை அறையில் விளக்கில் திரிஇட்டு விளக்கு ஏற்றுகிறாள்.தீபம் எரிய,கண்களை மூடி வணங்குகிறாள் அவள். தனது அறை சென்று தலையினை துவட்டுகிறாள்.அப்போது குக்கர் விசில் அடிக்க,வேகமாக சமையலறை சென்று, அடுப்பினை சரி செய்துவிட்டு,குக்கரினை கீழே இறக்குகிறாள்.பிறகு காலை டிபன் சாப்பிட்டுக்கொண்டே,மதிய சாப்பாட்டினை டிபன் பாக்ஸ்-இல் எடுத்துக்கொண்டு,தயார் செய்துவிட்டு, சமயலறையில் இருந்து வெளியே வருகிறாள்.

காட்சி- 1E

இடம்:ஜோதியின் அறை /நேரம்: காலை.

ஜோதி தனது அறையில் கண்ணாடி முன்பு தலையினை வாரி,நெற்றியில் குங்குமம் வைத்து,வெளியே வருகிறாள்.அவள் சமையலறை சென்று,தான் கட்டி வைத்த சாப்பாட்டினை எடுத்து தனது பேக்கில் வைத்து கொள்கிறாள்.பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்து,வீட்டினை பூட்டுகிறாள்.

ஜோதி: அக்கா......! நான் வரேன்.

என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள் ஜோதி.

காட்சி- 2

இடம்: பஸ் ஸ்டாண்டு /நேரம்: காலை.

ஜோதி பஸ் ஸ்டாண்டிற்கு வருகிறாள்.அங்கே இரண்டு,மூன்று பேர் நின்றுகொண்டு இருக்க,அவர்கள் அருகில் வந்து நிற்கிறாள் ஜோதி.

ஜோதி: சார், 5-B பஸ் இன்னும் வரல இல்ல?"

ஒரு நபர்: இன்னும் வரல்லம்மா. இனிமேதான் வரணும்.

ஜோதி: தேங்க்ஸ் சார்.

சிறிது நேரம் செல்ல,ஒரு பஸ் வருகிறது.அதில் ஏறுகிறாள் ஜோதி.

காட்சி - 3

இடம்: பஸ் உள்ளே / நேரம்: காலை.

ஜோதி பஸ்ஸில் ஏறி,உள்ளே செல்கிறாள்.

ஜோதி: திருவல்லிகேணிக்கு ஒரு டிக்கெட்.

என்று நடத்துனரிடம் காசை நீட்டுகிறாள்.நடத்துனர் காசை வாங்கிகொண்டு டிக்கெட்டினை கொடுக்கிறார்.

நடத்துனர்: போலாம் ரைட்...

நடத்துனர் விசில் அடிக்க,பஸ் கிளம்புகிறது.ஜோதி, ஒரு காலியான சீட்டில் சென்று அமருகிறாள்.நடத்துனர் தனது இருக்கையில் இருந்து எழுந்து வருகிறார்.

நடத்துனர்: ம்ம், டிக்கெட் டிக்கெட்......

நபர்-2: காந்தி மண்டபம் ஒண்ணு

அவர் ஐம்பது ரூபாயை நீட்ட.....

நடத்துனர்: ஏன் சார்,அஞ்சு ரூபா டிக்கெட்க்கு அம்பது ரூபா நீட்டுனா எப்படி?

நபர்-2: சில்லறை இல்லையே சார்.

நடத்துனர்: எங்ககிட்ட மட்டும் சில்லறை இருக்கா? எப்படி சில்லறை கொடுக்க? அஞ்சு ரூபா இருந்தா கொடுங்க

நபர்-2: இல்ல சார், சுத்தமா இல்ல.அதான் சொல்றேன்."

நடத்துனர்: பஸ்-ல ஏறுனா சில்லறை ஒழுங்கா வெச்சிக்கமாட்டீன்களா?சில்லறை இல்லாம எதுக்கு சார் ஏறுறீங்க? காலங்காத்தால டென்ஷன் படுத்திக்கிட்டு....."

ஒருவித சலிப்புடன் பாக்கெட்டில் இருந்து சில்லறையை எடுத்து கொடுக்கிறார் நடத்துனர்.

நடத்துனர்: "இந்தாங்க, பிடிங்க. (உரத்த குரலில்) சில்லறை கரெக்டா கொடுத்திட்டு டிக்கெட் வாங்குங்க.எங்கிட்ட சில்லறை கிடையாது இப்பவே சொல்லியாச்சு."

சிறிது தூரம் சென்றதும்,வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் கை அசைக்கிறார்.உடனே டிரைவர் பஸ்-ஐ நிறுத்த, அந்த பாட்டி ஏறுகிறார்.அவர் முழுவதுமாய் ஏறுவதற்குள், டிரைவர் பஸ்-ஐ எடுக்க முயல,உடனே ஒருவர்......

நபர்-3: அட இருங்க,அவங்க இன்னும் ஏறல."

டிரைவர்: "எம்மா, சீக்கிரம் ஏறி வாம்மா.இருக்கிறது நாலு படிக்கட்டு. அதுல ஏறி வர எவ்வளவு நேரம்?

ஜோதி: "பரவாயில்ல விடுங்க,பாவம்,வயசானவங்க. மெதுவா ஏறி வரட்டும்."

அந்த பாட்டி ஏறி உள்ளே வர,பஸ்ஸை எடுக்கிறார் டிரைவர்.

ஜோதி: "பாட்டி,உள்ளே வந்து நில்லுங்க. வாங்க...... பாத்து.................."

நடத்துனர்: "எங்கே பாட்டி போகணும்? "

பாட்டி: நுங்கம்பாக்கம் போகணும்.

என்று அந்த பாட்டி காசை நீட்ட.....

நடத்துனர்: "இந்தா பாட்டி,டிக்கெட்-ஐ பிடி."

அந்த பாட்டி டிக்கெட்டினை வாங்கி கொள்கிறார்.

நடத்துனர்: (உரத்த குரலில்) ம், வேற யாராவது டிக்கெட் எடுக்கணுமா?

என்று கேட்டுகொண்டே செல்கிறார் நடத்துனர்.அந்த பாட்டி நேராக ஜோதி அமர்ந்து இருந்த இருக்கையின் பக்கத்தில் சென்று நின்று கொள்கிறார்.வயது முதுமை காரணமாக அவரால் நிற்க முடியவில்லை. அந்த பாட்டியின் நிலையினை பார்த்ததும் ஜோதிக்கு இரக்கம் வருகிறது.

ஜோதி: "பாட்டி, .........நீங்க வேணும்னா என் சீட்-ல உட்கார்ந்துகோங்க.வாங்க பாட்டி."

என்று தன் இருக்கையினை அந்த பாட்டிக்கு கொடுத்துவிட்டு நின்றுகொண்டு வருகிறாள் ஜோதி.

பஸ் நேராக திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்பில் நிற்கிறது.

நடத்துனர்: திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப் இறங்கு.

ஜோதி பஸ்-ல் இருந்து இறங்குகிறாள்.

காட்சி - 4

இடம்: இந்தியன் பேங்க் / நேரம்: காலை.

ஜோதி இந்தியன் பேங்க் உள்ளே வருகிறாள்.

ஜோதி: "குட் மார்னிங் சார்......."

ஆபிசர்: "குட் மார்னிங், வாங்க ஜோதி மேடம்.தினமும் கரெக்ட்-ஆ ஒன்பது மணிக்கு வந்திறீங்க. ஒருநாள் கூட லேட்-ஆ வர மாதிரி தெரியல."

லேசாக சிரிக்கிறாள் ஜோதி.

ஜோதி: "மேனேஜர் இன்னும் வரலையா?"

ஆபிசர்: "இல்ல, இன்னும் வரல மேடம்.இனிமேதான் வருவாரு."

பிறகு தனக்கான இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டு,தனது வேலையினை பார்க்க தொடங்குகிறாள் ஜோதி.

*****************

(……BREAK……)

காட்சி -5

இடம்: கிருஷ்ணனின் வீடு/ நேரம் : காலை 10 மணி.

டெலிபோன் மணி ஒலிக்கிறது.போன்-ஐ எடுத்து பேசுகிறார் கிருஷ்ணன்.

கிருஷ்ணன்: "ஹலோ, யாரு?"

ஆதி: நீங்கதான் கிருஷ்ணனா?"

கிருஷ்ணன்: ஆமாம்.....!"

ஆதி: நீங்க OMR ரோட்-ல 2400 சதுர அடியில நிலம் ஏதாவது வாங்கி போட்டிருகீங்களா?"

கிருஷ்ணன்: ஆமா, நிலம் வாங்கியிருக்கேன். நீங்க யாரு?"

ஆதி: சார், என் பேரு ஆதி. எனக்கு சைடு, மெயின் தொழில் எல்லாமே கட்டபஞ்சாயத்து, அடிதடிதான்.ஒண்ணுமில்ல நீங்க வாங்கி வெச்சிருக்கிற இடத்த ஏற்கனவே வேற ஒருத்தர் பார்திட்டாரு.ஆனா, அதுக்குள்ளே நீங்க பணம் கொடுத்து நிலத்த வாங்கிடீங்க.அவரும் உங்ககிட்ட பேசுனாறாம்.ஆனா நீங்க ஒத்துகலயாமே?"

கிருஷ்ணன்: "ஆமா, அதுக்கு என்ன இப்போ?"

ஆதி: அதான் சார், அதபத்திதான் நானும் பேச போன் பண்ணேன்.ஒண்ணுமில்ல,நீங்க இடத்துக்கு கொடுத்த பணத்துக்கு டபுள்-ஆ வேணா நான் தரேன். இடத்த அப்படியே என்கிட்ட கொடுத்திடுங்க. நானும் கையோட பணத்த கொடுத்திடறேன்.விஷயம் அவ்வளவுதான்.

கிருஷ்ணன்: ஹலோ, யார் சார் நீங்க? என்ன பேசுறீங்க? நான் ஏற்கனவே இதைபத்தி முடிவ அவர்கிட்டயே சொல்லியாச்சு. அந்த இடத்துல நான் சொந்தமா வீடு கட்டுறதுக்காக வாங்கி வெச்சிருக்கேன்.நான் அத விக்க தயாரா இல்ல சாரி.

ஆதி: சார், கொஞ்சம் நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க.அப்புறமா சொல்லுங்க

கிருஷ்ணன்: இதுல யோசிச்சு சொல்ல என்ன இருக்கு?இதோ பாருங்க,நான் அந்த இடத்த கஷ்டப்பட்டு பணம் சேர்த்து வாங்கியிருக்கேன்.என்னால இப்போ அத விக்க முடியாது

ஆதி: ஏன் சார்,இதுல என்ன கஷ்டம்...? நான்தான் கொடுத்த பணத்துக்கு டபுள்-ஆ தரேன்-னு சொல்லுறனே....?அப்புறம் ஏன் அடம்பிடிக்கரீங்க?பணத்த வாங்கிட்டு இடத்த கொடுத்திடுங்க.

கிருஷ்ணன்: இதோ பாருங்க சார்,உங்களுக்கு சொன்னா புரியாதா? நான்தான் தெளிவா சொல்லிட்டேனே?அப்புறம் ஏன் எங்கிட்ட தேவையில்லாம பேசிக்கிட்டுயிருகீங்க?

ஆதி: அப்போ நீங்க இடத்த கொடுக்க மாட்டீங்க?நான் இந்த விஷயத்த சுமூகமா முடிக்கலாம்னு பார்க்குறேன். ஆனா, நீங்க பேசுறத பார்த்தா வேற வழியில்தான் இடத்த வாங்கணும் போல இருக்கே? நான் ஏற்கனவே என் தொழில பத்தி சொல்லிட்டேன்.கொஞ்சம் யோசிச்சு பாருங்க.அப்புறம் உங்களுக்குதான் பின்னாடி தேவையில்லாம பிரச்சனை வரும்.பார்த்துகோங்க.

கிருஷ்ணன்: என்ன சார், மிரட்டுறீங்களா? இந்த மாதிரி எல்லாம் பண்ணீங்கன்னா,நான் போலீஸ்-க்கு போவேன்.ஜாக்கிரதை.மரியாதையா போன்-ஐ வைங்க.

என்று பேசிவிட்டு போன்-ஐ கீழே வைக்கிறார் கிருஷ்ணன்.

காட்சி- 5 A

இடம்: கிருஷ்ணனின் வீடு / நேரம் : காலை 10.10 மணி.

பத்து நிமிடம் கழித்து இரண்டு ஆட்டோ கிருஷ்ணனின் வீடு முன்பு வந்து நிற்கிறது.அதில் இருந்து நான்கைந்து பேர் உருட்டுக்கட்டை, அரிவாளோடு இறங்கி நேராக உள்ளே செல்கின்றனர்.

ஆள்-1: "யோவ், இங்க யாருய்யா கிருஷ்ணன்? நீதான் கிருஷ்ணனா?

கிருஷ்ணன் : ஆமா நான்தான் கிருஷ்ணன். நீங்க எல்லாம் யாரு?

என்று சொல்லி வாயை மூடுவதற்குள்,அவரது சட்டையை பிடித்து தரவென்று இழுத்து தள்ளுகின்றனர்.

ஆள்-1 : யோவ்.....வாயா. ......உட்காருய்யா.....உட்காருய்யா.

அவரை சோபாவில் உட்கார வைக்கின்றனர்.

கிருஷ்ணன்: யாருய்யா நீங்க?என்ன வேணும் உங்களுக்கு?

பதட்டமாய் கேட்கிறார் கிருஷ்ணன்.

ஆள்-1 : நாங்கல்லாம் ஆதி அண்ணன் ஆளுங்க. எங்க அண்ணன் உன்கிட்ட நிலம் விஷயமா போன்-ல பேசுனாராம் ஆனா, நீ ஒத்துக்காம தகராறு பண்றீயாமே? அதான், அண்ணனே வந்துகிட்டு இருக்காரு.எங்கள முன்னாடி போகசொன்னாரு.அதான் வந்தோம்.

பேசிக்கொண்டே இருக்கும்போது அவனது செல்போன் மணி அடிக்க,போன்-ஐ எடுத்து பேசுகிறான் அவன்.

ஆள்- 1: அண்ணே,நாந்தாண்ணே.நாங்க வந்தாசின்னே. இதோ இருக்கான்.உட்கார வெச்சிருக்கோம்-னே.சரிண்ணே!,சரிண்ணே.

என்று சொல்லிவிட்டு போன்-ஐ வைக்கிறான் அவன்.

காட்சி- 6

இடம் : கிருஷ்ணனின் வீடு உள்ள தெரு / நேரம் : காலை

அதேநேரம் அவர்கள் இருக்கும் தெருவில் வெள்ளைநிற சட்டையும், கருப்பு நிற பேன்ட்-உம்,முகத்தில் மீசை மட்டும் வைத்துகொண்டு,சவரம் செய்த முகமாக,கண்ணாடி மட்டும் அணிந்துகொண்டு சைக்கிள்-லில் ஒருவர் வந்து கொண்டு இருக்கிறார்.அவர் ஓர் இடத்தில் சைக்கிள்-ஐ நிறுத்தி,அங்கு உள்ள ஒரு கடையில் சென்று..............

சைக்கிள்-இல் வந்த நபர் : சார்,இங்கே 24/50-ஆம் நம்பர் வீடு எங்கே இருக்கு?

கடைக்காரர் : அந்த வீடா...?இப்படியே நேரா போய் வலது பக்கம் திரும்பி போனீங்கன்னா, முதல் வீடு அதுதான்...

சைக்கிள்-இல் வந்த நபர் : அப்படியா,ரொம்ப தேங்க்ஸ் சார்

என்று சிரித்த முகமாக சொல்லிவிட்டு சைக்கிள்-ஐ எடுக்கிறார் அந்த மனிதர்.

காட்சி- 7

இடம் : கிருஷ்ணனின் வீடு / நேரம் : காலை.

அந்த கடைகாரர் கூறியதுபோல் சென்று,நேராக கிருஷ்ணனின் வீடு முன்பு சைக்கிள்-ஐ நிறுத்துகிறார் அந்த மனிதர்.பிறகு சைக்கிள்-இல் ஸ்டாண்டு போட்டுவிட்டு நேராக வீட்டின் உள்ளே வருகிறார்.அவர் உள்ளே வந்தவுடன் சோபாவில் அமர்ந்து இருந்த கிருஷ்ணனையும்,அங்கே சுற்றி நிற்பவர்களையும் திகைப்புடன் பார்த்துவிட்டு, தான் போட்டிருந்த கண்ணாடியை கழற்றுகிறார் அந்த மனிதர்.

(……..BREAK……)

சைக்கிள்-இல் வந்த நபர்: வணக்கம் சார், என் பேருதான் ஆதி.நான்தான் கொஞ்சநேரத்துக்கு முன்னாடி உங்ககிட்ட போன்-ல பேசுனேன்.விலாவாரியா பேசுறதுக்குள்ள போன்-ஐ வெச்சுட்டீங்க.அதான் நேர்ல பேசலாம்னு வந்தேன். வர வழியில டிராபிக். அதான் லேட்டு.போன்-ல என்னமோ போலீஸ்-க்கு போவேன்னு சொன்னீங்களே?இன்ஸ்பெக்டர்-கிட்ட பேசணுமா?இல்ல, கமிஷனர்-கிட்டே பேசணுமா? சொல்லுங்க.நானே போன் போட்டு தரேன். பேசுங்க.

எதுவும் பேசாமல் இருக்கிறார் கிருஷ்ணன்.

ஆதி: ம் …? என்னயா அப்படி பார்க்குறே? ஒ, சைக்கிள்-ல வந்திருக்கேன்னு பார்க்குறியா?ஏன்யா......ரௌடி-ன்னா மூர்கத்தனமா மூஞ்ச வெச்சிக்கிட்டு,சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை மாதிரி உடம்பு எல்லாம் நகைபோட்டுக்கிட்டு,டாட்டா சுமோவில டிராவெல் பண்ணி வருவான்-னு நினைச்சியா?ஏன்யா, ரௌடி-குன்னு ஒரு மரியாதை கிடையாதா?எனக்கு இந்த வெட்டி பந்தா எல்லாம் பிடிக்காது.இதோ பாரு நான் பண்ற தொழில் வேணும்-ன்னா இண்டீசென்ட்-ஆ இருக்கலாம்.ஆனா, ஆளு நான் பக்கா டீசன்ட்.அப்படி இருக்கிறது-நாலதான் உன்கிட்ட வாயால பேசிகிட்டு இருக்கேன்.இல்லன்னா ஆளுங்கள அனுப்ப தெரிஞ்ச எனக்கு,உன்ன போட்டுதள்ள ச�





0

| Email this story Email this Script | Add to reading list



Reviews
Add to Reading List
Become a fan
Email this story
Email It

Share on Other Sites:



Other writing by shiridi999 THAAIMAI-2


Tags

Script, Drama, Death, Family

About | News | Contact | Your Account | TheNextBigWriter | Self Publishing | Advertise

© 2013 TheNextBigWriter, LLC. All Rights Reserved. Terms under which this service is provided to you. Privacy Policy.